
Sunday, 30 September 2012

MY fav song
---------------
Iru Vizhi Unathu Imaigalum Unathu
Kanavugal Mattum Enathey Enathu
Iru Vizhi Unathu Imaigalum Unathu
Kanavugal Mattum Enathey Enathu
Naatkal Neeluthey Nee Engo Poanathum
Aen Dandanai Naan Ingae Vaazhvathum
Orae Nyaabagam Orae Nyaabagam
Iru Vizhi Unathu Imaigalum Unathu
Kanavugal Mattum Enathey Enathu
Naatkal Neeluthey Nee Engo Poanathum
Aen Dandanai Naan Ingae Vaazhvathum
Ohoa Hoa.. Orae Nyaabagam
Ohoa Hoa.. Unthan Nyaabagam
Kaathal Kaayam Naerumbothu Thookkam Ingu Aethu
Orae Nyaabagam Orae Nyaabagam
Saturday, 15 September 2012
மனப்பெண்
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமைகா ணோமெனப் பொருமுவாய், சிச்சி!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய்.
அங்ஙனே
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்
கண்ணினோர் கண்ணாய்க் காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,
சதத்தின் விதிகளைத் தனித்தனி யறிவாய்,
பொதுநிலை யறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழு நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுத் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்ப மோங்கிடச் செய்வேன்.
மனப்பெண்
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமைகா ணோமெனப் பொருமுவாய், சிச்சி!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய்.
அங்ஙனே
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்
கண்ணினோர் கண்ணாய்க் காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,
சதத்தின் விதிகளைத் தனித்தனி யறிவாய்,
பொதுநிலை யறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழு நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுத் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்ப மோங்கிடச் செய்வேன்.
Sunday, 2 September 2012
வீடுகளில் கொசுக்களை விரட்ட
அன்பர்களுக்கு வணக்கம், நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!!
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
தேங்காய் நார் :
தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும்.
தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது. ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கற்பூரம் :
கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.
கெரோசின் மற்றும் கற்பூரம் :
இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்...
காப்பாற்ற வாங்க ..
இன்று உலகம் எதிர்நோக்கி இருக்கும் மிக பெரிய பிரச்னை “புவி வெப்பமடைவது “ தான் . இந்த வெப்பமயமாதலால் விரைவில் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள போகிறோம் . அதன் விளைவுகள் சில ..
v அடிகடி சுனாமி , பூகம்பம் , நிலா அதிர்வு என இயற்கை சீற்றங்கள் .
v பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்கின்றது .
v நதிகள் வற்றி , நிலத்தடி நீர்மட்டம் குறைகின்றது .
v தட்பவெட்ப நிலை மாறுவதால் புதிதாத வியாதிகள் தோன்றுதல் .
v விலை நிலங்கள் அழிவதால் , மரங்களை வெட்டுவதால் மழை பொழிவு குறையும்
v இது போல பல ஆபத்துகள் வர போகின்றன . இந்த ஆபத்தில் இருந்து பூமியை காப்பது நம் கையில் தான் உள்ளது .
நாம் செய்ய வேண்டியது .
- கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை குறைக்கலாம்
- குளிர்சாதன பெட்டி , A.C பயன்படுத்துவதை குறைக்கலாம்
- வீட்டில் உள்ள குண்டு பல்பிர்க்கு பதிலாக CFL பலப் பயன்படுத்தலாம்
- கடைகளில் பெருள்கள் வாங்கும் போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தலாம்
- மரங்கள் வெட்டுவதை குறைத்து அதிக மரங்கள் நடலாம்
- திருமணங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் பேப்பர் கப் பயன்படுத்தலாம்
- வீட்டில் வீணாக மின் சாதன பொருள்கள் பயன்பாட்டில் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்
- வீணாக போகும் மழைநீரை சேமிக்கலாம்
- தன்னிறை நீனடிப்பதை குறைக்கலாம்
- கணினியில் CRT க்கு பதில் LCD or LED திரையை பயன்படுத்தலாம்
இவையனைத்தும் நம்மால் செய்ய கூடிய காரியங்கள்தான் . இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது வருங்கால தலைமுறைக்கு செய்யும் உதவியாகும் .

