காப்பாற்ற வாங்க ..
இன்று உலகம் எதிர்நோக்கி இருக்கும் மிக பெரிய பிரச்னை “புவி வெப்பமடைவது “ தான் . இந்த வெப்பமயமாதலால் விரைவில் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள போகிறோம் . அதன் விளைவுகள் சில ..
v அடிகடி சுனாமி , பூகம்பம் , நிலா அதிர்வு என இயற்கை சீற்றங்கள் .
v பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்கின்றது .
v நதிகள் வற்றி , நிலத்தடி நீர்மட்டம் குறைகின்றது .
v தட்பவெட்ப நிலை மாறுவதால் புதிதாத வியாதிகள் தோன்றுதல் .
v விலை நிலங்கள் அழிவதால் , மரங்களை வெட்டுவதால் மழை பொழிவு குறையும்
v இது போல பல ஆபத்துகள் வர போகின்றன . இந்த ஆபத்தில் இருந்து பூமியை காப்பது நம் கையில் தான் உள்ளது .
நாம் செய்ய வேண்டியது .
- கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை குறைக்கலாம்
- குளிர்சாதன பெட்டி , A.C பயன்படுத்துவதை குறைக்கலாம்
- வீட்டில் உள்ள குண்டு பல்பிர்க்கு பதிலாக CFL பலப் பயன்படுத்தலாம்
- கடைகளில் பெருள்கள் வாங்கும் போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தலாம்
- மரங்கள் வெட்டுவதை குறைத்து அதிக மரங்கள் நடலாம்
- திருமணங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் பேப்பர் கப் பயன்படுத்தலாம்
- வீட்டில் வீணாக மின் சாதன பொருள்கள் பயன்பாட்டில் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்
- வீணாக போகும் மழைநீரை சேமிக்கலாம்
- தன்னிறை நீனடிப்பதை குறைக்கலாம்
- கணினியில் CRT க்கு பதில் LCD or LED திரையை பயன்படுத்தலாம்
இவையனைத்தும் நம்மால் செய்ய கூடிய காரியங்கள்தான் . இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது வருங்கால தலைமுறைக்கு செய்யும் உதவியாகும் .

