Wednesday, 17 October 2012





கூலிக்கு- வாடகைக்கு
நிலமுண்டு
நீருண்டு
ஆளுண்டு
வீடுண்டு
...பிள்ளை உண்டு
தாரம் உண்டு

தாய்.. வாடகை வாங்காத முதலாளி
கூலி கேட்காத தொழிலாளி
உயிருக்குள் உயிர் வளர்த்தாள்
உடலுக்குள் உடல் வளர்த்தாள்

தாயே ! உன்னையே குழந்தையாக்கி
என் வயிற்றில் வளர்த்தாலொழிய
என் `கடன்” தீராதம்மா !

No comments:

Post a Comment