Friday, 17 August 2012


(((---உன்னன்பில் வாழ்கிறேன் ---))) (பிரியாராம் ) 

நிலையில்லா வாழ்க்கையில் 
நிரந்தமில்லா கனவுகளில் 
நிலையான உன்னன்பு .., 
நீரோட்டமாய் என்சுவாசத்திலும் , 

நாடிநரம்புகளின் இரத்தநாளங்களிலும், 
சுகமாய் நித்தம் வருடுவதால் 
மேகம்போல் சூழும் சோகத்தை 
மறந்து தோகையை விரித்தாடும் 
மயில்போல் மகிழ்ச்சிகொண்டு, 

மனம் அழும் ஓசையை 
குயில் பாடும் சங்கீதமாக்கி 
நிழல் போன்ற வாழ்வை 
நிஜமாய் வாழ்கின்றேன் ...........


No comments:

Post a Comment